×

மண்டபம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: மண்டபம், ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக கடலில் அமலில் இருந்த 60 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 17ம் தேதி முதல் பாக் ஜலசந்தி கடலோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் மண்டபத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 405 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இதில் ஒரு படகில் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 3 விசைப்படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 17 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் நான்கு விசைப்படகுகளை சிறைபிடித்து 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மண்டபம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mandapam, Jagadapattinam ,Rameswaram ,Sri Lanka ,Tamil Nadu ,Pak Strait ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு